கோவை: கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்து முன்னணி பொறுப்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டமும், இஸ்லாமிய கூட்டு இயக்கங்கள் சார்பில் இந்து முன்னணியை கண்டித்து நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டமும் தற்காலிகமாக தேதி மாற்றப்பட்டுள்ளது.

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (04-03-2020) இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து இன்று (06-03-2020) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அவ்வமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி அறிவித்திருந்தார்.
அதேபோல இந்து முன்னணி அமைப்பை கண்டித்து இன்று (06-03-2020)அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டியக்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தை வரும் சனிக்கிழமைக்கு தேதி மாற்றியுள்ளனர். அதேபோல இஸ்லாமிய அமைப்பினர் தற்காலிகமாக கடையடைப்பு தேதியை மாற்றியுள்ளனர். இன்று தேதி அறிவிக்கப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.