கோவையில் இந்து முன்னணி அமைப்பின் கடையடைப்பு போராட்டத்தை எதிர்த்து மக்கள் ஓற்றுமை மேடை அமைப்பினர் மனு

கோவை: கோவையில் நாளை நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் எந்தவகையிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவையில் நாளை நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டம் எந்தவகையிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அமைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனுவில், கடந்த முறை பாஜக பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது இந்து முன்னணி அமைப்பினர் பொதுச்சொத்தை சேதப்படுத்தினர். மேலும் பல்வேறு வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே நாளை நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டத்தினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கி, இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.



மேலும் மக்கள் மேடை ஒற்றுமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறுகையில், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் இதுபோன்ற கதவடைப்புகளுக்கு அழைப்பு தரக்கூடாது என்றும் அதுபோன்ற கதவடைப்புகளை தடுத்து பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. எனவே கோவையில் இந்து முன்னணி கட்சியினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை இடையுறு தராமலும் காவல்துறையினர் காக்க வேண்டும் என்பதற்காக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் நாளை இந்து முன்னணி மற்றும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...