இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி மக்கள் மத்தியில் விளக்கி கூற கிராமங்கள் தோறும் செல்ல உள்ளோம் – பாஜக இளைஞரணி தேசிய துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம்

நீலகிரி: குடியுரிமை திருத்த சட்ட மசோதவில் உள்ள நன்மைகள் பற்றி கிராமங்கள் தோறும் சென்று பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் மூலம் மக்களிடம் விளக்கி கூற உள்ளதாக பாஜக இளைஞரணி தேசிய துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: குடியுரிமை திருத்த சட்ட மசோதவில் உள்ள நன்மைகள் பற்றி கிராமங்கள் தோறும் சென்று பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் மூலம் மக்களிடம் விளக்கி கூற உள்ளதாக பாஜக இளைஞரணி தேசிய துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு, பேரணி மற்றும் பொது கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதீய ஜனதா கட்சி இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் என்பது பொது மக்களை திசை திருப்ப தான் நடைபெறுகிறது. இதன் பாதிப்பு என்ன என்பது குறித்து விளக்குகிறோம் என போராட்டத்தை தான் எதிர்க்கட்சிகள் திசை திருப்புவதாக குற்றம் சாட்டினார்.



பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மக்கள் மத்தியில் விளக்கி கூற கிராமங்கள் தோறும் செல்ல உள்ளோம். இந்த சட்டத்தை விளக்கி கூற பொதுகூட்டம், பேரணியும் நடத்தவுள்ளோம் என கூறினார். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு சட்டம் குறித்து தெரியாது. குடியுரிமை திருத்த சட்டம் என்றால் ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்தது பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு தான் இந்த சட்டம் பொருந்தும் என தெரிவித்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரத்தை கட்டுபடுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது கருத்து திமுக காங்கிரஸ் கட்சியினருக்குத்தான் பொருந்தும். மத்திய அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. இதில் காஷ்மீரில் 370 வது சட்ட பிரிவை ரத்துசெய்தது ஆகும். இதனால் அம் மாநிலமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு இருந்தால் கூறுங்கள் என்று கூறியும் எந்த வித பாதிப்பையும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளால் கூற முடியவில்லை. தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...