திருப்பூர்: திருப்பூரில் விவசாய நிலங்களில் பெட்ரோல் குழாய் அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அழகுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரதிய பெட்ரோல் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விவசாய நிலங்களுக்குள் கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலைகள் ஒரமாக கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குழாய் அமைக்கும் பணிகள் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு 21 விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளை கூட்டத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதனால் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விவசாய விளை நிலங்கள் வழியே பெட்ரோல் குழாய் பதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகாரிகள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்தால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்போம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.