வரும் மார்ச்‌ 8-ம்‌ தேதி ஈஷா சார்பில்‌ மார்பகம்‌, கர்ப்பபை பரிசோதனை முகாம்‌

கோவை: ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில்‌ மார்பகம்‌, கர்ப்பபை தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்‌ மார்ச்‌ 8-ம்‌ தேதி நடைபெற உள்ளது.

கோவை: ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில்‌ மார்பகம்‌, கர்ப்பபை தொடர்பான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்‌ மார்ச்‌ 8-ம்‌ தேதி நடைபெற உள்ளது.

கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும்‌ நோக்கத்தில்‌ ஈஷா இராமப்‌ புத்துணர்வு இயக்கத்தின்‌ ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன்‌ இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில்‌ மாதந்தோறும்‌ நடத்தி வருகிறது.

அதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்‌ புற்றுநோய்‌ சிகிச்சை மற்றும்‌ ஆராய்ச்சி மையத்துடன்‌ இணைந்து மார்பகம்‌ மற்றும்‌ கர்ப்பபை தொடர்பான நோய்களை கண்டறிவதற்கான இலவச பரிசோதனை முகாமை இம்மாதம்‌ நடத்த உள்ளது. இம்முகாம்‌, கோவை ஈஷா யோகா மையம்‌ அருகே உள்ள முட்டத்துயல்‌ பகுதியில்‌ இருக்கும்‌ ஈஷா இராம மருத்துவமனையில்‌ மார்ச்‌ 8-ம்‌ தேதி காலை 8 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரை நடைபெறும்‌. இதில்‌ 20 வயது முதல்‌ 75 வயது வரை உள்ள பெண்கள்‌ கலந்துகொள்ளலாம்‌. அவர்களுக்கு ஆரம்ப கட்ட பரிசோதனைகள்‌ இலவசமாக செய்யப்படும்‌.

மேலும்‌, புற்றுநோய்‌ தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனையும்‌ வழங்கப்படும்‌. கூடுதல்‌ தகவல்களுக்கு 90801 78524, 95242 90388 ஆகிய எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...