கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 2 மூதாட்டிகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பாலமலையில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் ஜீப் ஒன்று இறங்கி கொண்டு இருந்தது. அப்போது, மலையில் இருந்து 3வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது, திடீரென ஜீப்பின் பிரேக் கட்டாகி ஜீப் பள்ளத்தின் கீழே விழுந்தது. இதில் ஜீப்பில் பயணித்த கோட்டத்துறையை சேர்ந்த சிவனம்மாள் (65), மாதவன் என்பவரின் மனைவி பாப்பம்மாள் (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், ஜீப்பை ஓட்டி வந்த ஐயப்பன் (29) மற்றும் முருகன் (34), மாரியம்மாள் (80), மாதவன் (55) மருதன் (55) ஆகியோருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்துக்கு உள்ளானவர்கள் பாலக்காடு மாவட்டம் அகழி கோட்டத்துறை அருகிலுள்ள வண்ணான்துறை மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பாலமலை அடிவாரத்திலுள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்று வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.