கோவை: மத்திய அரசு குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில் பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் தற்போது 78 பேரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை: மத்திய அரசு குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தவர்களில் பொது சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் தற்போது 78 பேரை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பாதிப்பினால் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். மேலும், இந்த நோயானது தொடர்ந்து பரவி வருவதால் அதை தடுக்கும் நோக்கில் சர்வதேச உலகமும் தங்களது ஆய்வினை தொடர்ந்து செய்து வருகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில், விமான நிலையங்களில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் , தென்கொரியா, நேபாளம்,இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஈரான், இத்தாலி போன்ற போன்ற 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பின்பே வெளியே அனுப்பப்படுகின்றனர். அதேசமயம், வைரஸ் அறிகுறிகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் குறிப்பிட்ட இந்த 12 நாடுகளிலிருந்து வந்த பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தனர். இந்த நிலையில், தற்போது 78 பேராக கண்காணிப்பு வளையம் குறைந்துள்ளது.
அதேபோல, கொரோனா வைரஸ் சந்தேகம் தொடர்பாக மாணவர் ஒருவர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருந்த நிலையில் உயர்மட்ட பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
மேலும், நேற்று சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சுகாதாரத்துறையினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் இருவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறையினர் அவர்களை விடுவித்தனர்.