திருப்பூர்: திருப்பூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன 20 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையும் மீன் மார்க்கெட்டில் இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் தடவப்படுகிறதா, பாதுகாப்பான முறையில் மீன்கள் கொண்டுவந்து விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் மீன் வியாபாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினர். பின்னர் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.