கோவை கணபதி அருகே பள்ளிவாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீசார் விசாரணை

கோவை: கோவை அடுத்த சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணபதி பகுதியில் பள்ளிவாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட கணபதி பகுதியில் பள்ளிவாசலில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நேற்று இரவு இந்து முன்னணி பொறுப்பாளர் ஆனந்தை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து கோவை அரசு மருத்துவமனை முன்பு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர்.



இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கோவை கணபதி ரூட்ஸ் நிறுவனம் எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால், அது வெடிக்காததால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...