நீலகிரி: கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி ராமனின் மாடினை புலி தாக்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடை கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராமன். இவரது மாட்டினை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் சென்ற அவரது மாடு இன்று மாலை வரை வரவில்லை என்பதால் மேய்ச்சலுக்கு சென்ற கடனா காெல்லிப்பகுதிக்கு சென்று பார்த்த போது மாட்டினை புலி அடித்து சாப்பிட்டு சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டவுடன், வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் புலி தாக்கி இறந்த மாட்டினை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதேபோல் ஒன்பதாவது மைல் மே பீல்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் புலி ஒன்று குட்டியுடன் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஒட்டி சாலையில் கடந்து சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். எனவே தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் புலி நடமாட்டம் இருப்பதினால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இப்பகுதியில் அடிக்கடி மாடுகளை புலி ஒன்று அடித்து சாப்பிட்டு வந்தது. மேலும், தமிழ் பிரேயர் தனியார் எஸ்டேட் பகுதியில் காவலாளி ஒருவரை தாக்கி கொன்றதையடுத்து அப்பகுதியில் நடமாடிய புலி சுட்டுக்கொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.