கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் பகுதிகளில் தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஜி.எஸ்.டி.,வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த தென்னை நார் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் சில நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரி கட்டாமல் ஏய்ப்பு செய்து வருவதாக டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த தகவலின் போது கள்ளிப்பட்டி புதூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிப்பு நிறுவனங்கள் ஜி எஸ் டி மற்றும் பஞ்சாயத்து வரி உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் ஆண்டுக்கு 250 கோடி வரை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, டெல்லியிலிருந்து வந்த ஜி எஸ் டி அதிகாரிகள் கள்ளிப்பட்டி புதூரிலுள்ள சூர்யா காயர்ஸ், சோபியா காயர்ஸ் ,வேலு பைபர்ஸ், வெற்றி விநாயகா காயர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ஜி எஸ் டி வரி செலுத்தி இருக்கின்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையை அடுத்து மேலும் பல நிறுவனங்களில் விரைவில் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.