உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க உள்ள சோலையார் அணையில் மத்திய நிபுணர்கள் குழு ஆய்வு

கோவை: வால்பாறை சோலையார் அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோலையார் அணையை மத்திய நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை: வால்பாறை சோலையார் அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில் சோலையார் அணையை மத்திய நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம் ஆழியார் திட்டத்தின் மூல அணையான சோலையார் அணை உள்ளது. இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் இரண்டு மின் நிலையங்களை கடந்து பரம்பிகுளம் அணைக்கு செல்கிறது. அங்கிருந்து கேரளா மற்றும் தமிழக அணைகளான ஆழியார், திருமூர்த்தி அணைக்கு செல்கிறது. இதன் மூலம் பொள்ளாச்சி, திருப்பூர் தாராபுரம், பல்லடம், பகுதிகளின் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயத்திற்கும் குடி நீருக்கும் பயன்படுகிறது.



இந்நிலையில், இந்த அணையை உலக வங்கி நிதி உதவியுடன் பராமரிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. 



இதனை முன்னிட்டு மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் உறுப்பினர்கள் மிட்டல், நரேஷ்குமார் மாதூர், சதீஷ்குமார், ஸ்ரீ வஸ்தவா ஹைதராபாத், முராரி ரத்னம் டெல்லி, மத்திய புவியியல் ஆய்வு குழுமத் துணை இயக்குநர் ஸ்ரீனிவாசன், மாநில திட்ட மேலாண்மை இயக்குநர் காளிமுத்து ஆகியோர் சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதியான சின்னகல்லார், கீழ் நீரார் அணையை பார்வையிட்ட பின் சோலையார் அணையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர் குழுமத்தின் தலைவர் பத்மநாபன் பேசுகையில், அணையின் உறுதி தன்மை, கட்டுமான உறுதி மற்றும் பராமரிப்பு பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தப்பட்டு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து உலக வங்கி நிதி உதவியுடன் திட்டம் 2ன் படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...