கோவை கோனியம்மன் தேரோட்டத்தில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் 10000 குடிநீர் பாட்டில் விநியோகம்!

கோவை: மனிதநேயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெற்று வரும் கோனியம்மன் தேர் விழாவில் ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


கோவை: மனிதநேயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெற்று வரும் கோனியம்மன் தேர் விழாவில் ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது



கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடைபெறுவது வழக்கம்.



இந்த நிலையில், இந்தாண்டிற்கான கோனியம்மன்‌ கோவில்‌ திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம்‌ 2 மணி முதல் தேரோட்டம்‌ வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தின் போது, ஒப்பணக்கார வீதியில் உள்ள கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...