திருப்பூரில் முறைகேடாக கடத்திவரப்பட்ட கிராவல் மண்ணை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக கடத்திவரப்பட்ட கிராவல் மண்ணை தடுப்பு ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் முறைகேடாக கடத்திவரப்பட்ட கிராவல் மண்ணை தடுப்பு ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர் நல்லூர் நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவசக்தி. இவர் புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் முறைகேடாக ஏற்றி வருவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியில் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.



அப்போது, அவ்வழியே வந்த லாரியை மடக்கி விசாரணை செய்த போது லாரியின் உரிமையாளர் அப்பு குட்டி என்பவர் நில வருவாய் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் கூறியும் லாரியை நிறுத்தாமல் மண்ணை கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர் அப்புகுட்டியிடம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்த போதே காரை நிறுத்தாமல் நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தியின் காலில் காரை ஏற்றி விட்டு சென்றுள்ளார்.



இதனை அடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற சிவசக்தி தனது பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் லாரியின் உரிமையாளர் மீது நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...