திருப்பூர்: வெளிநாடுகளிலிருந்து வந்து எந்தவித ஆவணங்கள் மற்றும் முறைகேடாக தமிழகத்தில் தங்கி உள்ளவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR , NRC ஆகியவற்றால் இந்திய மக்களுக்கு ஆபத்து இல்லாத சூழ்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இஸ்லாமியர்களை தூண்டி விட்டு வெளிநாட்டில் இருந்து எந்தவித ஆதாரங்களும் இன்றி தமிழகம் வரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டியே போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
அதேபோல், இந்த போராட்டங்களில் மத்திய அரசையும் இந்து மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.