கோவை: கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24-வது வார்டில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் எந்தளவு நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து ஆணையர் ஆய்வு நடத்தினார்.

பின்னர், மேற்கு மண்டலம் 7-வது வார்டில் உள்ள கவுண்டம்பாளையம் மற்றும் வ.உ.சி. நகர் பிரதான சாலை பகுதியில் 61.00 இலட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் தார்சாலை அமைக்கும் பணிகளையும், அதே போல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் கட்டப்பட்டுவரும் பலஅடுக்குகள் கொண்ட வாகனநிறுத்துமிட பணிகள் (Multi Level CarParking) நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், மேற்கு மண்டலம், 5-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுவரும் மின் மயானத்தின் பணிகள் நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்ட ஆணையர் விரைவில் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில்௮ரசன், செயற்பொறியாளர் (ஸ்மாரா்ட் சிட்டி) வி.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.