கோவை: கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் நேரில் சந்தித்து பேசியதோடு கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொது செயலாளர் ஜப்பார், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்துவது இஸ்லாமியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வரிடம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
தங்களது கோரிக்கை மனுவினை படித்து பார்த்த முதல்வர், அதிமுக அரசு, ஒரு போதும் சிறுபான்மை இன மக்களை பாதிக்கவிடாது எனவும் உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என அவர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் சட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர்.