கோவை: கோவையில் மார்ச் 1 ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை: கோவையில் மார்ச் 1 ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் இளைஞர் ஒருவர் கத்தியுடன் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி அசோக் உட்பட சிலர் தலைமறைவாக இருக்கும் நிலையில் கவுண்டம்பாளையம் முருகன் நகரில் வசித்து வரும் அசோக் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர் அவரது மனைவி பிரகதி, தாயார் சரஸ்வதி ஆகியோருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தி "அசோக் எங்கிருந்தாலும் விடமாட்டோம்", என அந்த இளைஞரின் மிரட்டல் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து துடியலூர் போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம்
நேற்று, மார்ச் 1 ஆம் தேதி கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே ஒரு பெண் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் கேரளா பதிவு எண் கொண்ட காரும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரை ஓட்டி வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
இதையடுத்து பிரச்சினைக்குரிய இடத்திற்கு வந்த ஒரு தரப்பினர் காரை ஓட்டி வந்தவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தனது சகோதரர் செல்வாவிற்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் செல்வாவுடன் சம்பவ இடத்திற்கு வந்த அசோக்,ராசு, சண்முக சுந்தரம் , சச்சு, தினேஷ் மற்றும் கிரன் ஆகியோர் எதிர்தரப்பினரானா கார்த்திக், ஜெரால்ட் மற்றும் ஹரீஷ் ஆகியோரை தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அரிவாளால் தாக்கிய 6 பேர் மீது துடியலூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம்147,148, 324,307 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்றும் தாக்குதல் நடத்திய அசோக் உட்பட சிலர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.