நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதியில் இன்று மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் எலும்புக்கூட்டினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது கொலையா? தற்கொலையா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் தான் முழு விவரங்கள் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.