கோவை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் கடந்த 14 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முதல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாலை நேர தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணிகளுக்கு எந்தவிதமான போராட்டத்திற்கும் அனுமதி கொடுக்காத காவல்துறை, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு கோவையில் பதற்றத்தையும் வன்முறையும் தூண்டுகின்ற வகையில் நடைபெறுகிற போராட்டத்திற்கு காவல்துறை எப்படி அனுமதி கொடுத்தது என தீர்மானம் இயற்றப்பட்டு, மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திமுக, தபெதிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். பின்னர் போலீசார் முக்கிய நிர்வாகிகளை மட்டும் மாநகர காவல் ஆணையாளரை சந்திக்க அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் பல்வேறு அமைப்பினர் காவல் ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது;-
அனுமதி இல்லாத இடத்தில் பாரதிய ஜனதா கட்சி மேற்கூரை அமைத்து ஒலிபெருக்கி வைத்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. இது கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே, தாங்கள் இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்து பா.ஜ.கட்சியின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி கோவையின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.