கோவை: வால்பாறையை அடுத்துள்ள நல்லமுடி தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானை துரத்தியதில் தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி தேயிலை தோட்டம். கேரள எல்லையை ஒட்டியுள்ள இப்பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வருவது வழக்கம். இந்த தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிபவர் அங்கமுத்து (55). இவர் வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக காட்டு யானை ஒன்று எதிரே வந்துள்ளது.
காட்டு யானையை வருவதை அறிந்த அங்கமுத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால், காட்டு யானை தொடர்ந்து அவரை துரத்தவே அருகில் இருந்த பள்ளத்தில் குதித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அங்கமுத்துவின் அலறலை கேட்ட பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஒன்று திரண்டு காட்டு யானையை விரட்டி விட்டு அவரை மீட்டனர்.

இதனை தொடர்ந்து, அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.