கோத்தகிரி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்லிகம்பை பகுதியில் இன்று காலை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிப்பர் லாரி ஏரியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்லிகம்பை பகுதியில் இன்று காலை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் டிப்பர் லாரி ஏரியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த பில்லிகம்பை பகுதியில் இன்று ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த லட்சுமனசாமி (22) என்பவர் கந்துவட்டி வசூல் செய்ய தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திடீரென எதிரே வந்த டிப்பர் லாரியை கண்டவுடன் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கியுள்ளார்.

இதனை அறியாத டிப்பர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் சுமார் 10 அடி தூரம் வரை சென்று லாரியை நிறுத்தி பார்த்த போது லட்சுமண சாமி தலை நசுங்கி சாலையில் கிடந்துள்ளார். 



இதனை கண்டவுடன் லாரி ஓட்டுநர் கோத்தகிரி காவல்நிலையத்துக்கு வந்து சரணடைந்தார்.

இதையடுத்து, கோத்தகிரி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...