கோவை: கோவையிவ் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக அரசும், காவல்துறையும் துணை போகின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஏற்கனவே டெல்லியில் சிஏஏக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்தது. இந்த நிலையில் கோவையிலும் இருதரப்பினரும் போராடிவரும் நிலையில் அடுத்தகட்டமான என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துகட்சி ஆலோசனைக்கூட்டம் வடகோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், திமுக,காங்கிரஸ், மதிமுக,விடுதலை சிறுத்தைகள் ,சி.பி.எம், தபெதிக, திராவிட தமிழர் கட்சி, கொ.ம.தே.க உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று கோவையில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு என்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என விவாதித்தனர்.
ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் , குடியுரிமை சட்டதிற்க்கு ஆதரவாக கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டம் பதற்றத்தை உருவாக்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக காந்திபுரத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்காத போது தற் போது பாஜகவினருக்கு அனுமதி வழங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் காந்திபுரத்தில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதை பார்க்கும் போது காவல்துறையும், தமிழக அரசும் பாஜகவினர் போராட்டத்திற்கு துணை போகியுள்ளதா? எனக்கேள்வி எழுப்பினார். அறவழியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கபட்டு வரும் நிலையில் பா.ஜ.க விற்கு மட்டும் காவல் துறை அனுமதி கொடுத்துள்ளது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் நாளை காலை மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநாகர காவல் ஆணையர் ஆகியோரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாககாவல் துறை உரிய இந்த எடுக்கவில்லை எனில் அனைத்து கட்சிகளின் சார்பில் மீண்டும் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தா