திருப்பூர்: டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை சம்பவம் நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிஏஏக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்காக பதவி விலக வேண்டும் மற்றும் ஜனநாயக போராட்டங்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைக்கப்பட்டது.

மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.