குன்னூர் கன்ட்டோன்மென்ட் துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி; பாரதியார் ஒரு மனதாக தேர்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் குன்னூர் கன்ட்டோன்மென்ட் துணைத் தலைவராக ஒரு மனதாக மீண்டும் ஆறு மாதங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் குன்னூர் கன்ட்டோன்மென்ட் துணைத் தலைவராக ஒரு மனதாக மீண்டும் ஆறு மாதங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கன்டோன்மென்ட்டுகளுக்கு துணைத் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்குட்பட்ட பகுதிகளும், சென்னை பரங்கிமலை, திருச்சியில் துப்பாக்கி தொழிற்சாலைக்குட்பட்ட பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் 7 வார்டுகள் உள்ளன. தற்போது 6 கவுன்சிலரும், ஒரு துணைத் தலைவரும் உள்ளனர். கன்ட்டோன்மென்ட் துணைத் தலைவருக்கான தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. தற்போது துணைத்தலைவர் பதவியில் அதிமுகவை சேர்ந்த பாரதியார் உள்ளார். இந்தாண்டு துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்த்து‌ வந்தனர். ஆனால், புனேவில் இருந்து வந்த அறிக்கையில் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டும், மேலும் ஆறு மாதங்கள் கழித்து துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்றுடன் ஐந்தாண்டு பதவி காலம் முடிந்து கன்ட்டோன்மென்ட் கவுன்சிலர்கள் முன்னிலையில் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அனைத்து கவுன்சிலர்களும் ஒரு மனதாக பாரதியாரை பரிந்துரை செய்தனர். அதன்படி, மீண்டும் ஆறு மாதங்களுக்கு பாரதியார் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி கன்ட்டோன்மென்ட் அலுவலகத்தில் நடைபெற்றது. துணைத் தலைவருக்கான சான்றிதழினை பிரிகேடியர் ராஜேஷ்வர் சிங் வழங்கினார். பதவியேற்பு நிகழ்ச்சி நிர்வாக அதிகாரி பூஜா பலீச்சா முன்னிலையில் நடைபெற்றது.

பதவியேற்ற துணைத் தலைவர் பிரிகேடியரிடம் கன்ட்டோன்மென்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அதை நிறுத்த வேண்டும் என்றும் கால அவகாசம் வழங்கி முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு பின்னர் இடிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தார். அதனை பரிசீலனை செய்வதாக பிரிகேடியர் தெரிவித்துள்ளார். கன்ட்டோன்மென்ட் பகுதியில் 32 கட்டிடங்களில் அதிமுக கவுன்சிலர்களின் கட்டிடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் புத்திசந்திரன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...