கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி பட்டியல்‌ குறித்து அனைத்து அரசியல்‌ கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக் கூட்டம்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குசாவடி பட்டியல்‌ வெளியிட்டது தொடர்பாக அனைத்து அரசியல்‌ கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று(02.03.2020) மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குசாவடி பட்டியல்‌ வெளியிட்டது தொடர்பாக அனைத்து அரசியல்‌ கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம்‌ இன்று(02.03.2020) மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ பிரசன்னா இராமசாமி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (தேர்தல்‌) முத்துகருப்பன்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சி பிரமுகர்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌;-

கோவை மாவட்டத்தில்‌ நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்‌ 26.02.2020 அன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌ திருத்தப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்‌ 05.03.2020 அன்று வெளியிடப்படும்‌. நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்‌ அச்சிட்டு முடித்து விநியோகம்‌ செய்யும்‌ பணி முடிவுற்றபிறகு, வாக்காளர்‌ பட்டியல்‌ தயார்‌ செய்யும்‌ பணி நடைபெறும்‌. 20.03.2020 அன்று வரைவு வாக்காளர்‌ பட்டியல்‌ வெளியிடப்படும்‌.

கோவை மாநகராட்சியில்‌ 100 வார்டுகளில்‌ 1245 வாக்குச்சாவடிகளும்‌, 744147 ஆண்‌ வாக்காளர்களும்‌, 740813 பெண்‌ வாக்காளர்களும்‌, 203 இதரர்களும்‌ என மொத்தம்‌ 1485163 வாக்காளர்களும்‌, பொள்ளாச்சி நகராட்சியில்‌ 36 வார்டுகளில்‌ 82 வாக்குச்சாவடிகளும்‌, 39007 ஆண்‌ வாக்காளர்களும்‌, 41318 பெண்‌ வாக்காளர்களும்‌, 15 இதரர்‌ என மொத்தம்‌ 80340 வாக்காளர்களும்‌, வால்பாறை நகராட்சியில்‌ 21 வார்டுகளில்‌, 84 வாக்குச்சாவடிகளும்‌, 28426 ஆண்‌ வாக்காளர்களும்‌, 29224 பெண்‌ வாக்காளர்களும்‌, 3 இதரர்களும்‌, என மொத்தம்‌ 57653 வாக்காளர்களும்‌, மேட்டுப்பாளையம்‌ நகராட்சியில்‌ 33 வார்டுகளில்‌, 62 வாக்குச்சாவடிகளும்‌, 28422 வாக்காளர்களும்‌, 30159 பெண்‌ வாக்காளர்களும்‌, 5 இதரர்களும்‌, மொத்தம்‌ 58586 வாக்காளர்களும்‌, 37 பேரூராட்சிகளில்‌ உள்ள 585 வார்டுகளில்‌, 718 வாக்குச்சாவடிகளும்‌, 280510 ஆண்‌ வாக்காளர்களும்‌, 292984 பெண்‌ வாக்காளர்களும்‌ 77 இதரர்களும்‌ மொத்தம்‌ 573571 வாக்காளர்களும்‌ உள்ளனர்‌.

கோவை மாவட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில்‌ 775 வார்டுகளில்‌ 2191 வாக்குச்சாவடிகளும்‌, 1120512 ஆண்‌ வாக்காளர்களும்‌, 1134498 பெண்‌ வாக்காளர்களும்‌ 303 இதரர்களும்‌ என மொத்தம்‌ 22,55313 வாக்காளர்கள்‌ உள்ளதாக மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...