கோவை: கோவையில் முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை இரயில் நிலையத்தின் பின்புறமுள்ள பார்சல்கள் ஏற்றிச் செல்லும் பாதை வழியாக சென்று தண்டவாளத்தை கடப்பதற்காக சுப்பிரமணியன் என்பவர் நின்றிருந்துள்ளார். அப்போது, கோவை சுங்கம் பைப்பாஸ் தியாகி சிவராம் நகரை சேர்ந்த பிரமோத் குமார் (23) சுப்பிரமணியனிடம் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்து சென்றுள்ளார்.
இதையடுத்து, கோவை இருப்புப்பாதை காவல் வட்ட காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா குற்றவாளியை கைது செய்து அவனிடம் இருந்து பணத்தை மீட்டு அவனிடம் விசாரித்த போது, அவன் மீது ஏற்கனவே சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், பெரம்பூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் 1 வழக்கும், முத்துப்புதூர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஆவடி காவல் நிலையத்தில் 1 வழக்கும் மற்றும் கோவை மாநகர இராமநாதபுரம் காவல் நிலையத்தில் 1 வழக்கும் மொத்தம் 13 வழக்குகளில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு, இருப்புப்பாதை காவல்துறை தலைவர் வனிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் ஆணையின் பேரில் கோயமுத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அவர்களின் அறிவுரையின்படி கோவை காவல் வட்ட ஆய்வாளர் கிருஷ்ணலீலா அவர்கள் நடவடிக்கை எடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில் பிரமோத்குமாரை குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.