கோவை: கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தி கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் ரோடு பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாயகி.இவரது கணவர் மணிகண்டன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ம் தேதி அவர்களின் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதால் தன்னுடைய கணவருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஓட்டுனருக்கு ஆதரவாக இந்து முன்னனியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பேருந்து உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு தன் கணவர் மீது பல்வேறு வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். தன்னுடைய கணவர் மீது போடப்பட்ட பொய்யான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் வலியுறுத்தி மனு அளிக்க கோவை மாவட்ட ஆட்சியல் அலுவலகம் வந்த லோகநாயகி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கணவருக்காக கர்ப்பிணி பெண் தீடிரென நடத்திய போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடரந்து போலீஸார் கர்ப்பிணி பெண்ணை அழைத்துசென்று ஆட்சியர் மனு அளிக்க வைத்தனர்.