காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற வைணவ திருக்கோவிலாகும். இங்கு மாசிமக தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான தேர்த்திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது.



அதிகாலை முதலே மூலவர் அரங்கநாதருக்கு விஷேச பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து, கொடியேற்ற நிகழ்வினையொட்டி கோவில் மூலவர் முன்பு அமைந்துள்ள கொடி மரத்தின் அருகே உள்ள கருடாழ்வார் சிலைக்கு பால், திருமஞ்சனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

இதனை அடுத்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேத விர்பனர்கள் மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடி ஏற்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். இந்த கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

மேலும், இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியினையடுத்து தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அரங்கநாதருக்கு தினசரி பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடத்தப்பட்டு அரங்கநாதர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 8ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...