கோவை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு வீடில்லாத அருந்ததிய மக்களுக்கு வழங்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூக நீதி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், மேட்டுப்பாளையம் பகுதியில் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் இதனை மீட்டு தர பலமுறை மனுக்கள் அளித்துள்ளதாகவும் பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமில்லாத மக்களுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், 450 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறிய அவர்கள், தற்போது நிலமில்லாத அருந்ததியர் சமூகத்தை சார்ந்த மக்கள் அதிக அளவில் உள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800 பேருக்கு பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து மீட்டு பஞ்சமி நிலங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.