கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம்!

கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு அளிக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு அளிக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 95 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனையடுத்து தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து கூலி உயர்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி, கூலி உயர்வு பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் கூலி உயர்வு பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததாகவும், அதற்குள் தீர்வு காணாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...