திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு

திருப்பூர்: திருப்பூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.



திருப்பூர் - தாராபுரம் சாலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஆலோசனைகளை வழங்கினார்.



பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மத்திய அரசிடம் இருந்து திருப்பூருக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க உத்தரவு பெற்றுக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், ரூ.336 கோடியில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14ம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஆய்வு பணிகள் தற்போது மேற்கொண்டுள்ளதாகவும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற உள்ளதால் தேதி மாற்றப்படுமா என்பது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...