கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உட்பட 5 பேர் கைது

கோவை: கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த வழக்கில் இளைஞர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). கூலி தொழிலாளியான இவர் கோவை, மரக்கடை பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தனது மனைவியை ரஞ்சித் குமார் கடத்திச் சென்றதாக மரக்கட்டையை சேர்ந்த முகமது நிஷார் என்பவர் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், முகமது நிஷாருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் ஆனது என்றும், தனது மனைவிக்கு 16 வயது என்று அவர் குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் போலீசார் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியைக் கடத்திச் சென்ற ரஞ்சித் குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதையடுத்து, 16 வயது சிறுமியைத் திருமணம் செய்த முகமது நிஷாரையும் போக்ஸோ சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், திருமணம் செய்து வைத்த முகமது நிஷாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் தாயாரையும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...