மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வனக்கல்லூரி மாணவர்; பலமணி நேரம் போராடி உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வனக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் பல மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் மூழ்கி வனக்கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் பல மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மோகன்ராஜ் என்பவர் முதலாம் ஆண்டு செரி கல்ச்சர் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார். சேலம் கருப்பூரை சேர்ந்த இந்த மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று தனது சக நண்பர்கள் எட்டு பேருடன் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அனைவரும் ஊமப்பாளையம் என்ற இடத்தில் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குச் சென்ற காரணத்தினால் மோகன்ராஜ் என்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினர் மோகன்ராஜின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தற்போது உயிரிழந்த மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, உயிரிழந்த மாணவன் மோகன் ராஜ் நன்கு நீச்சல் தெரிந்தவர் என்பதால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என சந்தேகம் தெரிவித்துள்ள அவரது பெற்றோர், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாணவன் உயிரிழப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...