கோவையில் 34,286 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்..! ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்

கோவை: தமிழகத்தில் இன்று துவங்கிய 12ம் வகுப்பு தேர்வில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், கோவையில், 116 மையங்களில் 34,286 மாணவர்கள் தேர்வு எழுதுவதாகவும் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் இன்று துவங்கிய 12ம் வகுப்பு தேர்வில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி வரும் நிலையில், கோவையில், 116 மையங்களில் 34,286 மாணவர்கள் தேர்வு எழுதுவதாகவும் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் மாதம் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 7276 பள்ளிகளில் இருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகிறார்கள். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களில், புதுச்சேரி மாணவர்கள் 14,958 பேர் ஆவர் மற்றவர்கள் தமிழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



4,41,612 பேர் மாணவியரும், 3,74,747 பேர் மாணவர்களும் தேர்வு எழுதும் நிலையில், மாணவர்களை விட, 66,865 மாணவிகள் கூடுதலாக எழுதுகின்றனர். தேர்விற்காக 3012 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று துவங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது.



அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகளும் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவில், 4,000 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்வு முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது எனவும், மீறி ஈடுபட்டால் வாழ்நாள் தடையும், 3 முதல் 5ஆண்டுகள் ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ம் தேதி வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 116 மையங்களில் 34,286 மாணவர்கள் தேர்வு எழுதுவதாகவும் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.



தேர்வின் காலம் காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை இருக்கும் எனவும் பள்ளி கல்வி இயக்குநரகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உயர் மட்ட அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வுகளை கண்காணிப்பார்கள் என்று பள்ளி கல்வி இயக்குநரகத்தின் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.

எந்தவொரு முயற்சியும் அடுத்த இரண்டு தேர்வுகளுக்கு தடைசெய்யப்படும் எனவும் ஆள்மாறாட்டம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...