திருப்பூர்: திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஈ எஸ் ஐ மருத்துவமனைக்கான கட்டிடம் கட்ட மண் பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் விரைவில் பணிகள் தொடங்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கான இடத்தில் மண் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் கட்டிடப் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், மண் பரிசோதனைகளில் திருப்தி இல்லை என்றால் மாற்று இடம் தேடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.