குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி

கோவை: குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எடப்பாடி அரசு மதிப்பளிக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி கோவையில்ல தெரிவித்துள்ளார்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எடப்பாடி அரசு மதிப்பளிக்க வேண்டும், மேலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி கோவையில்ல தெரிவித்துள்ளார்.



கோவை கொடிசியா மைதானத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ம.ஜ.க பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, அருட்தந்தை ஜெகத்கஸ்பர், தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திப்பு சுல்த்தான் கொள்ளு பேரன் பக்தியார் அலி ஷா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ம.ஜ.க வினர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.



சிஏஏக்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டின் போது பேசிய தமிமுன் அன்சாரி, இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டத்தில் தினமும் 35 இளைஞர்கள் உயிரிழக்கி்ன்றனர் ,1 மணி நேரத்திற்கு 100 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் மேலும் விவசாயிகள் வாழ வழியின்றி உயிரிழக்கும் நிலையும் உள்ளது. இந்த மோசமான சூழ்நிலைகளை திசை திருப்பவே சி.ஏ.ஏ போன்ற நாசகார சட்டங்களை இந்த அரசு கொண்டு வந்திருக்கின்றது என குற்றம் சாட்டினார் டெல்லி சம்பவத்திற்கு சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும், நீதிபதி முரளிதர் இரவோடு இரவாக மாற்றப்பட்டது, நீதித்துறையில் பாசிச ஆதிக்கம் எப்படி இருக்கின்றது என்பதற்கு இது உதாரணமாக உள்ளது என கூறினார். பாஜன ஆட்சியில் நாடாளுமன்றம், நீதித்துறை மீது நம்பிக்கை குறைந்தாலும் பெரும்பான்மை மக்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மாநாட்டின் போது திப்பு சுல்த்தான் கொள்ளு பேரன் பக்தியார் அலி ஷா பேசுகையில், இந்த கூட்டத்திற்கு வந்ததில் எனக்கு பெருமை, மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்தார்.மக்களை பிரிக்கவே இந்த அரசு முயல்கின்றது எனவும், அம்பேத்கார் கொண்டு வந்த சட்டத்தை இந்த அரசு மாற்ற முயல்கின்றது அதை நாம் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தார். மேலும் மாநாட்டில் பெண்கள் அதிகம் கூடி இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்த அவர், இந்த போராட்ட உணர்வு நம்மை வெற்றி நோக்கி அழைத்து செல்லும் என கூறினார்.



இதனைதொடர்ந்து கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொது செயலாளர் டி.ராஜா பேசுகையில், 2002 ல் குஜராத்தில் நடந்த கலவரம் இப்போது டெல்லியில் ஏற்பட்டு இருக்கின்றதா? என்று நினைக்க தோன்றுகின்றது .மக்கள் தன்னெழுச்சியாக போராடுவதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை ஆளும் பாசிச கூட்டமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மாறி இருக்கின்றது என தெரிவித்த அவர், இவர்களின் பிடியில் இருந்து நமது ஜனநாயகம் காப்பாற்ற பட வேண்டும் என தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வர வேண்டும்.அப்படி கொண்டு வரவில்லை என்றால் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது என்று அர்த்தம் என தெரிவித்தார்

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...