கோவை: கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றுவருகிறது.
கோவை: கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றுவருகிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் சிஏஏ, என்.பி.ஆர் போன்ற சட்டங்களுக்கு எதிராக மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வாழ்வுரிமை மாநாடு நடைபற்றுவருகிறது.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,தமிழ் மையம் அமைப்பு நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பார்,திப்பு சுல்தான் கொள்ளு பேரன் பக்தியார் அலி ஷா,ம.ஜ.க மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது, த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து உள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஏஏ எதிர்ப்பாள்களும் கலந்து கொண்டுள்ளனர்.
சிஏஏக்கு எதிராக நடைபெறும் மாநாட்டையொட்டி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்..