திருப்பூர்: நிலத்தடி நீரினை எடுப்பதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி திருப்பூரிலும் மினரல் வாட்டர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகதஸ்தர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் படி முறையான உரிமத்தை குறைவான குடிநீர் ஆலைகளே பெற்ற நிலையில் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும் என மினரல் வாட்டர் வினியோகஸ்தர்கள் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருப்பூரினை பொறுத்தவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் சப்ளையர்கள் , மக்களின் குடிநீர் தேவையினை பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றனர்.
தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் அரசின் விதிமுறைகளின் படி செயல்பட்டால் நிச்சயம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிலத்தடி நீர் எடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி திருப்பூர் மினரல் கேன் வாட்டர் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.