மங்களூர் - கோயம்புத்தூர் இடையே விரைவில் தேஜஸ் ரயில் சேவை

நாடு முழுவதும் தேஜஸ் ரயில்களை இயக்குவதில் ரயில்வே துறை ஆர்வம் காட்டி வரும் நிலையில் விரைவில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தேஜஸ் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.



கோவை: கோவை -மங்களூருக்கு இடையே தேஜஸ் ரயில் சேவை இயக்கப்படும் பட்சத்தில், காலை 6 மணிக்கு மங்களூரில் புறப்படும் ரயில், பகல் 12:10க்கு கோயம்புத்தூர் வந்து சேரும் வகையில் அமையும். அதே போல் மறுமார்க்கத்தில் கோவையில் பிற்பகல் 2:30க்கு புறப்பட்டு, இரவு 8:40க்கு மங்களூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ரயில் சேவை தொடர்பாக 2020ம் ஆண்டு அட்டவணை கமிட்டிக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. இதற்கு வாரியம் அனுமதி அளித்ததும், இந்த ரயிலின் கட்டண விவரங்கள் மற்றும் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தேஜஸ் ரயில் சேவை 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையிலும், ஒவ்வொரு இருக்கையின் பிற்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்இடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும், வெளிப்புறமும் தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

 மேலும் மேலும், செல்போன் சாா்ஜா் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்இடி விளக்கு உள்ளிட்ட 22 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் பயணிகளுக்கிடையே பெரும் எதிர்ப்பார்ப்பினை தேஜஸ் ரயில் சேவை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...