கோவை: கோவை கீரணத்தம் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவை கீரணத்தம் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை கோவில்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கீரணத்தம் பகுதியை சேர்ந்த முருகனின் மகள் நந்தினி(21). இவர் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணிதவியலில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இவரும் சங்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(24) என்பவரும் பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தினேஷ் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நந்தினியை தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து எழுந்த வற்புறுத்தல் வாக்குவாதமாக மாறியதையடுத்து நந்தினி தினேஷீடன் பேசுவதை நிறுத்தினார்.
இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்று நந்தினியின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்து நந்தினியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கு இருந்த கயிறை எடுத்து கழுத்தில் இறுக்கியதுடன் தான் கொண்டு சென்ற சாணி பவுடரையும் அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக வாயில் திணித்துள்ளார். இதன்பின் நந்தினியின் வீட்டிலிருந்து தினேஷ் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வெளியே சென்ற நந்தினியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது நந்தினி மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நந்தினி உயிழந்தார். இதைத்தொடர்ந்து தினேஷும் தனது வீட்டில் வைத்து சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சி செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தினேஸை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை அரசு மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.