திருப்பூர்: திருப்பூர் அருகே வங்கிக்குள்ளேயே அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசி கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கணேசன். வழக்கம்போல இன்று பணிக்கு வந்த கணேசன் வங்கியின் உணவருந்தும் அறைக்குச் சென்று அதிக நேரம் வெளியில் வராததால் சக அலுவலர்கள் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், வங்கி அலுவலர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.