கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் இன்று துவங்கி வரும் மார்ச் 6 வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தூய்மை இந்தியா, உழவாரப்பணி, சாலை பாதுகாப்பு, கழிவறை பயன்பாடு, ஆளுமைத்திறன் உட்பட பல்வேறு கருத்தரங்கங்கள் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதன் துவக்க விழா இன்று கல்லூரி கருத்தரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கலந்து கொண்டார். நாட்டு நலப்பணி திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் தலைமையுறையாற்றிய கல்லூரி முதல்வர், கல்லூரிக்கு அடிப்படை வசதியான நீர் தேக்க தொட்டியை அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் நீர் தேக்க தொட்டி அமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரிடம் பேசி மாணவர்கள் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், பேராசிரியர்களின் பிரச்சனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த விழாவில் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர், நாட்டு நலத்திட்ட அலுவலர்கள் முனைவர் பெரியசாமி, முனைவர் உமாமகேஸ்வரி, ரூபா, சங்கர் மற்றும் நான்கு அலகுகளைச்சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.