ஆன்மீகம்‌ மட்டுமின்றி சமூக சவால்களை எதிர்கொள்வதிலும்‌ சத்குரு தீவிரமாக செயல்படுகிறார்‌; சர்வதேச நீதிமன்ற நீதிபதி புகழாரம்‌

கோவை: கோவை "ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அவர்கள்‌ ஆன்மீகத்தில்‌ மட்டுமின்றி சமகால சமூகத்தில்‌ நிலவும்‌ சவால்களை எதிர்கொள்வதிலும்‌ தீவிரமாக செயலாற்றி வருவதாக நெதர்லாந்தில்‌ உள்ள சர்வதேச நீதிமன்றத்தின்‌ நீதிபதி தல்வீர்‌ பண்டாரி புகழாரம்‌ சூட்டியுள்ளார்‌.

கோவை: கோவை "ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு அவர்கள்‌ ஆன்மீகத்தில்‌ மட்டுமின்றி சமகால சமூகத்தில்‌ நிலவும்‌ சவால்களை எதிர்கொள்வதிலும்‌ தீவிரமாக செயலாற்றி வருவதாக நெதர்லாந்தில்‌ உள்ள சர்வதேச நீதிமன்றத்தின்‌ நீதிபதி தல்வீர்‌ பண்டாரி புகழாரம்‌ சூட்டியுள்ளார்‌.

கோவை ஈஷா யோகா மையத்துக்கு நேற்று (பிப்‌.28) வருகை தந்த அவர்‌ சத்குருவை நேரில்‌ சந்தித்து பேசினார்‌. அப்போது, காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக சத்குரு தொடங்கி வைத்த 'காவேரி கூக்குரல்‌' இயக்கத்துக்கு தனது ஆதரவையும்‌ பாராட்டுக்களையும்‌ தெரிவித்தார்‌.



இது தொடர்பாக அவர்‌ கூறுகையில்‌, “சத்குரு அவர்கள்‌ ‘குரு‘ என்பதற்கு ஒரு புது அர்த்தம்‌ கொடுத்துள்ளார்‌. அவர்‌ ஆன்மீகப்‌ பணிகளில்‌ தீவிரமாக ஈடுபடுவதோடு மட்டுமின்றி, சமகாலத்தில்‌ சமூகத்தில்‌ நிலவும்‌ சவால்களை எதிர்கொள்வதிலும்‌ தீவிரமாக செயல்பட்டு வருகிறார்‌” என்று கூறினார்‌.

ஏற்கனவே, சர்வதேச அளவில்‌ கவனம்‌ ஈர்த்துள்ள காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ வெப்பமண்டல நாடுகளில்‌ தண்ணீர்‌ பஞ்சத்தை போக்கவும்‌, விவசாய நிலங்களை பாலைவனமாவதையும்‌ தடுப்பதற்காக செயல்திட்ட வரைபடமாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள்‌ அமைப்பின்‌ சுற்றுச்சூழல்‌ தட்டம்‌ (UNEP), பாலைவனமாதலை தடுக்கும்‌ அமைப்பு (UNCCD), பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கூட்டமைப்பு (UNFCCC) போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகளில்‌ சத்குரு அவர்கள்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ தாக்கம்‌ மற்றும்‌ வாய்ப்புகள்‌ குறித்தும்‌ கலந்துரையாடியுள்ளார்‌.

இந்நிலையில்‌, சர்வதேச நீதிமன்றத்தின்‌ நீதிபதி தல்வீர்‌ பண்டாரியும்‌ இவ்வியக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...