தமிழ் மொழியை வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி தமிழ் மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பில் கோவையில் உண்ணாவிரத போராட்டம்

கோவை: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி தமிழ் மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தமிழ்நாட்டில் தமிழ் மொழியை ஆட்சி மற்றும் வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்த கோரி தமிழ் மொழிக் காப்பு கூட்டியக்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த போராட்டத்தில் தொடக்கநிலைக் கல்வியில் தாய்மொழி வழியாகவே கல்வி வழங்கப்படவேண்டும் எனவும் தமிழக அரசு இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தொடர்ந்து உயர்நிலை மற்றும் கல்லூரிக் கல்விகளில் தமிழ் வழி கல்வியை நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும், தமிழே ஆட்சிமொழி என்பதை தமிழக அரசு அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் பிற கோயில்களிலும் குடமுழுக்கு வழிபாடுகள் ஆகிய நிலைகளில் தமிழையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.



மேலும், தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழி பெயர்களையே சூட்ட வேண்டும், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது முகப்பு விளம்பர பலகைகளில் அரசு ஆணைப்படி முதல்மொழியாக தமிழை பயன்படுத்த வேண்டும், தமிழே கற்றுத் தராத பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும், மராட்டிய அரசினை போன்று தாய்மொழியில் கல்வி கற்றவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 80 விழுக்காடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும், கர்நாடக மாநில அரசினை போன்று தமிழக அரசு தமிழ்மொழி ஆணையம் அமைக்க வேண்டும், ஆணையத்தின் கொடியாக மூவேந்தர்களின் மீன், புலி, வில் சின்னங்களைப் பயன்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரூர் ஆதின சாந்தலிங்க மருதாசல அடிகளார், அயல் மொழி ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் பள்ளிகளில் ஆங்கிலம் அதிகமாக இருப்பதாகவும், தமிழ் மொழியிலேயே இறைவழிபாடு இருக்க வேண்டும் எனவும் அனைத்து கோவில்களிலும் தமிழ் மொழியிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்றார்.



மேலும், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் அதிகமான இடதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோவில்களில் தமிழ் இல்லாமல் போனதுக்கு தமிழர்கள் தான் காரணம் எனவும் கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் தான் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், கவிஞர் சிற்பி, அப்பாவு ரூட்ஸ் இயக்குனர் கவிதாசன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...