இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழா இரு சக்கர வாகன பேரணி; கோவை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

கோவை: இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வந்த இரு சக்கர வாகன பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

கோவை: இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வந்த இரு சக்கர வாகன பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு 1920ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி இருசக்கர மோட்டர் பேரணியானது கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் துவங்கியது. இந்த பேரணி ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர், தேனி,திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கடந்து வந்துள்ளது.



இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் வந்தடைந்த இந்த இருசக்கர வாகன பேரணியை செஞ்சிலுவை கட்டிடம் முன்பு மாவட்ட ஆட்சியர் ராசாமணி, கோவை ரெட் கிராஸ் சேர்மன் நந்தினி ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இந்த பேரணி வரும் 11ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பேரணி கொடி வழங்கப்பட உள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் 175 வாகனங்களில் 350 யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவை ரெட் கிராஸ் துணைத் தலைவர் குமுதா பழனிச்சாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...