பொள்ளாச்சியில்‌ இருந்து கோவை வழியாக பெங்களூரூ மற்றும்‌ சென்னைக்கு ரயில்கள்‌ இயக்க கோரிக்கை

கோவை: கோவையில்‌ இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்‌ வழியாக பெங்களூர்‌ மற்றும்‌ சென்னைக்கு ரயில்கள்‌ இயக்க தமிழ்நாடு ஒய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்‌ கழகம்‌ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில்‌ இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்‌ வழியாக பெங்களூர்‌ மற்றும்‌ சென்னைக்கு ரயில்கள்‌ இயக்க தமிழ்நாடு ஒய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்‌ கழகம்‌ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - போத்தனுர்‌ தடத்தில்‌ அகல ரயில்‌ பாதை பணிகள்‌ கடந்த 2017ம்‌ முடிவடைந்து ரயில்‌ போக்குவரத்து துவங்கியது. அதனை தொடர்ந்து பயணிகள்‌ ரயில்‌ இயக்கப்பட்டு வந்தது. ஆனால்‌, மீட்டர்‌ கேஜ்‌ பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்கள்‌ மீண்டும்‌ இயக்கப்படவில்லை. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர்‌ கோரிக்கை விடுத்தும்‌ கூடுதல்‌ ரயில்கள்‌ இயக்க ரயில்வே வாரியம்‌ சுணக்கம்‌ காட்டி வருகின்றது.

சமீபத்தில்‌ மக்களவையில்‌ கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர்‌, கோவையில்‌ இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு ரயில்கள்‌ இயக்க தற்போது திட்டம்‌ எதுவும்‌ இல்லை என்று கூறியிருந்தார்‌. இந்த நிலையில்‌, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்‌ கழகம்‌ தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்‌.

அதில்‌ கோவையில்‌ இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்‌, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை விழுப்புரம்‌, வழியாக சென்மைச்கு இரவ நேர ரயில்‌ இயக்கவும், பொள்ளாச்சியில்‌ இருந்து பழனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌ வழியாக பெங்களூருக்கு ரயில்‌ இயக்கவும்‌ கோரிக்கை விடுத்துள்ளனர்‌. மேலும்‌ பொள்ளாச்சியில்‌ இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு ரயில்‌ இயக்கவும் அதில்‌ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...