கோவை மாவட்ட ஆட்சியர்‌ தலைமையில்‌ மாவட்ட விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று(28.02.2020) விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று(28.02.2020) விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வேளாண்மை) சிவசுப்பிமணியன்‌, வேளாண்மை துணை இயக்குநர்‌ டாம்‌.பிசைலஸ்‌ உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ விவசாயிகளின்‌ கருத்துக்களை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகள்‌ வழங்கிய கோரிக்கை மனுக்கள்‌ மீது உரிய காலத்தில்‌ நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது ;-

தமிழ்நாடு அரசு விவசாயிகளின்‌ நலன்‌ சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்கள்‌ அனைத்தும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தொடர்ந்து சிறப்பாகவும்‌ அனைத்து விவசாயிகளும்‌ பயன்பெறும்‌ வகையிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறை சார்பாக PM கிசான்‌ திட்டத்தில்‌ பதிவு செய்து உதவி தொகை பெறும்‌ விவசாயிகள்‌ அனைவருக்கும்‌ உழவர்‌ கடன்‌ அட்டை வழங்குவதற்கான முகாம்கள்‌ நடைபெற்று வருவதாகவும்‌ உழவர்‌ கடன்‌ அட்டை வேண்டும்‌ விவசாயிகள்‌ சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி அவர்கள்‌ மூலம்‌ வங்கிக்கு விண்ணப்பிக்கலாம்‌.

நுண்ணீர்‌ பாசன திட்டத்தின்‌ விவசாயிகளின்‌ குறைகள்‌ அனைத்தும்‌ பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவும்‌, தடுப்பணைகள்‌ கட்டப்பட வேண்டிய இடங்களை தடுப்பணைகள்‌ கட்ட ஆவண செய்யப்படும்‌. நெடுஞ்சாலைகள்‌ விரிவாக்கத்தின்‌ போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சாலையின்‌ இருபுறமும்‌ மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறை மூலமாக மருத்துவமனை இல்லாத பகுதிகளில்‌ கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவும்‌, சர்கார்சாமகுளம்‌ வட்டம்‌ இடிகரை கிருஷ்ணாபுரம்‌ கிராமத்தில்‌ ஆரம்ப சுகாதார நிலையம்‌ அமைக்க வேண்டும்‌ என்ற விவசாயிகளின்‌ கோரிக்கையினை பரிசிலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேளாண்‌ பொறியியல்‌ துறையின்‌ கீழ்‌ மானியம்‌ வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இயந்திரங்கள்‌ வாடகை(Custom Hiring Centre) மையங்களில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்ட எண்ணெய்‌ அரைக்கும்‌ இயந்திரங்களில்‌ காணப்படும்‌ குறைபாடுகளை களைய வேளாண்‌ பொறியியல்‌ துறை அதிகாரிகள்‌ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

தென்னையை தாக்கும்‌ சுருள்‌ வெள்ளை ஈ கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளில்‌ உயிரியியல்‌ பூச்சிகளை கொண்டு தடுப்பு முறைகளை விளக்கி விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்கங்களை அவர்களின்‌ நிலத்தில்‌ செய்து காட்டிட வேளாண்மை துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்‌, அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ திட்டங்களை முறையாக பயன்படுத்தி விவசாயிகள்‌ பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...