கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும்‌ மருந்து நிர்வாகத்துறை வழிகாட்டுதல்‌ குழுக்கூட்டம்‌!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ உணவு பாதுகாப்பு மற்றும்‌ மருந்து நிர்வாகத்துறை வழிகாட்டுதல்‌ குழுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ உணவு பாதுகாப்பு மற்றும்‌ மருந்து நிர்வாகத்துறை வழிகாட்டுதல்‌ குழுக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்‌ தமிழ்செல்வன்‌, ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள்‌ வளர்ச்சி திட்ட அலுவலர்‌ மீனாட்சி, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, உணவு பாதுகாப்பு அலுவலர்கள்‌, உணவக உரிமையாளர்கள்‌ சங்கம்‌, பேக்கரி விற்பனையாளர்‌ சங்கம்‌, வணிக சங்க நிர்வாகிகள்‌, நுகர்வோர்‌ அமைப்பு சங்க பிரதிநிதிகள்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ அமைப்பு நிர்வாகிகள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌ ;-

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கடந்த 01.01 2019 அன்று முதல்‌ தமிழ்நாட்டில்‌ பிளாஸ்டிக்‌ பொருட்களை தடைசெய்ய ஆணையிட்டார்‌. அதனடிப்படையில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ பிளாஸ்டிக்‌ இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும்‌ எடுக்கப்பட்டு வருகிறது.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ கொண்டு உணவகங்களில்‌ சூடான பொருள்களை பொட்டலபிடுபவர்கள்‌/சில்லறை விற்பனைக்காக உணவுப்பொருட்களை பொட்டலபிடுபவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்‌. உள்ளாட்சி அமைப்பு (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும்‌ ஊராட்சி நிர்வாகம் ) உணவு பாதுகாப்புத் துறையும்‌ இணைந்து ஆய்வு மேற்கொள்ளும்போது உணவு வணிக நிறுவனத்தில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பயன்படுத்துவது கண்டறிந்தால்‌ அபராதம்‌ விதிக்கவும்‌, உணவு பாதுகாப்பு உரிமம்‌,/பதிவு ரத்து செய்யவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

பழைய செய்தித்தாள்‌/காகிதங்களில்‌ உடலுக்கு ஊறுவிளைவிக்கும்‌ அச்சிடப்பட்ட மை([ ஈட) இருப்பதால்‌ அதில்‌ பலகாரங்கள்‌ வழங்குவதும்‌ பொட்டலமிடுவதும்‌ உணவு பாதுகாப்புதுறையினால்‌ தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை பயன்படுத்துவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌. அனைத்து சாலையோர உணவு கடைகள்‌ தங்களது உணவு விற்பனையை சுத்தமாகவும்‌, சுகாதாரமாகவும்‌, செய்யவும்‌, பலகாரம்‌ வழங்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ மற்றும்‌ பழைய செய்தித்தாள்‌ பயன்பாட்டை தவிர்க்கவும்‌ சாலையோர உணவு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட புகையிலைப்‌ பொருட்களான பான்மசாலா, குட்காவை ஒழிப்பதற்கு உணவு பாதுகாப்பு துறையும்‌ மற்ற அரசுத்‌ துறைகளான உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்‌ துறைகளும்‌ இணைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது. FSSAI வகுத்துள்ள தர நிர்ணய (Hygiene Rating)-ன்படி அனைத்து ஹோட்டல்கள்‌ மற்றும்‌ திருமண மண்டபங்களில்‌ உணவை பாதுகாப்பான முறையில்‌ தயாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்‌.

குடிநீர்‌ தயாரிப்பு நிறுவனங்கள்‌ கட்டாயமாக இந்திய தரச்சான்று (BIS ISI) மற்றும்‌ உணவு பாதுகாப்பு உரிமம்‌ பெற்று தொழில்‌ செய்யவும்‌, 20 லிட்டர்‌ கொள்கலன்‌ குடிநீர்‌ கேன்களை சுத்தமாக பராமரிக்கவும்‌ மேற்படி கேன்களை தகுந்த கால இடைவெளியில்‌ மாற்றம்‌ செய்யவும்‌, மேற்படி குடிநீர்‌ கேன்களை வாகனங்களில்‌ எடுத்துச்‌ செல்லும்‌ போதும்‌ சில்லறை விற்பனைக்காக சேமித்து வைக்கும்போதும்‌ சூரிய ஒளி படாதவண்ணம்‌ பராமரிக்கவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மூலம்‌ இயங்கும்‌ கோவில்‌ அன்னதான கூடங்களை அவ்வப்போது ஆய்வு செய்யவும்‌, கோவில்களை சுற்றியுள்ள பிரசாத கடைகளில்‌ விற்கப்படும்‌ உணவு பொட்டலங்கள்‌ உணவு பாதுகாப்பு தரங்கள்‌ சட்டத்திற்கு உட்பட்டு விற்பனை செய்ய கண்காணிக்க வேண்டும்‌. மேலும்‌ இதுதொடர்பாக பிரசாத கடைக்கு இந்து சமய அறநிலை துறையின்‌ மூலம்‌ ஏலம்‌ விடும்போது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு கடை நடத்தப்பட வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ கடைகள்‌ ஏலம்‌ விட வேண்டும்‌.

அனைத்து இறைச்சி கடைக்காரர்களும்‌ நல்ல நிலையில்‌ உள்ள பிராணிகளை இறைச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும்‌. மேலும்‌ இறைச்சிகளை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்‌ போது அதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான வாகனத்தில்‌ கொண்டு செல்ல வேண்டும்‌ அதனை உள்ளாட்சி அமைப்புடன்‌ இணைந்து உணவு பாதுகாப்பு துறை கண்காணிக்க வேண்டும்‌.

மேலும்‌, அரசு/தனியார்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களால்‌ ஆய்வு மேற்கொண்டு விடுதி மற்றும்‌ கேன்டீன்களில்‌ வளாகத்ததை EAT RIGHT CAMPUS யாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. முதற்கட்டமாக அரசு துறை நிறுவனங்களான அரசு மருத்துவமனை மற்றும்‌ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளும்‌ EAT RIGHT CAMPUS யாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கல்லூரி மற்றும்‌ அரசு மருத்துவமனை முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள்‌, தரக்குறைவான உணவு, கலப்பட டீத்தூள்‌, கலப்பட எண்ணெய்‌, அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணம்‌ கலந்த உணவுகள்‌, மற்றும்‌ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள்‌, பிளாஸ்டிக்‌ சம்பந்தமான புகார்களை 94440-42322 என்ற வாட்ஸ்‌ அப்‌ எண்ணிற்கு தெரிவிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தெரிவித்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...