கோவை: வால்பாறையில் காயமடைந்த காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஈட்டியார் தேயிலை தோட்டத்தில் 30 வயது பெண் யானை காயத்துடன் சுற்றிவந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையின் சிறப்பு மருத்துவர் மனோகரன் காட்டு யானையை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, வனத்துறை மருத்துவர் மனோகரன் ஆலோசனைப்படி வால்பாறை கால் நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையில் வனத்துறையினர் காட்டு யானையின் காயம் ஆறுவதற்காக மாத்திரைகள், சத்து மாத்திரைகளை கரும்பு, வாழைப்பழம், அன்னாசி பழம், கொய்யா பழம், தர்ப்பூசணி மற்றும் ஆப்பிள் பழங்களில் வைத்து யானைக்கு அருகே வீசப்பட்டு வருகிறது. அதை காட்டு யானை விரும்பி சாப்பிட்டு வருகிறது.
இதன் காரணமாக காட்டு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறிய வனத்துறையினர், யானை சகஜ நிலைக்கு திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தனர்.